புக்லியா என்ற
இடத்தில் இருந்து 50 பேர் பேருந்து
ஒன்றில் சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.
நேபிள்ஸ் மலைப்
பகுதியில் அவெல்லினோ என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 அடி ஆழ பள்ளத் தாக்கில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்ததும்
தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர், 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும்
மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது.
பள்ளத்தாக்கில்
பேருந்து கவிழ்ந்ததால் மலைப் பகுதியில் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின.

No comments:
Post a Comment