Friday, 30 August 2013
இரத்தினபுரியில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2013, 10:27.22 AM GMT ]
இரத்தினபுரி கொட்டமுல்லை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
69 வயதான கணவரும், 62 வயதான மனைவியுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என பொலிஸார் கூறினர்.
சடலங்கள் மீட்கப்பட்ட கடையில் இரத்தம் சிந்திய அடையாளங்கள் இருப்பதாகவும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இவர்களின் உறவினர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸில் பணியாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment