பாகிஸ்தானின்
அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
ஒசாமாவின்
இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது பாகிஸ்தானிய மருத்துவர் ஷகீல்
அப்ரிடி தான் என குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே
லஷ்கர்- இ- இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பிற்கு மறைமுகமாக உதவி செய்த
குற்றத்திற்காக அப்ரிடி கைது செய்யப்பட்டார்.
மேலும் ஒசாமா
பதுங்கியிருந்த பகுதியில் சிஐஏ உதவியுடன் போலியாக சொட்டு மருந்து முகாம்
நடத்தியதாகவும், அமெரிக்காவுக்கு
உதவி செய்த குற்றத்திற்காகவும் 33 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தற்போது, பெஷாவரில் உள்ள சிறையில் அவர் தண்டனை
அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் இதனை
எதிர்த்து சட்ட நிபுணர்களும், மனித உரிமை
ஆர்வலர்களும் மேல் முறையீடு செய்தனர்.
இந்நிலையில்
கைபர் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஷகில் அப்ரிடி மீதான வழக்கை, வேறு நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என
இந்த ஆணையத்தின் கமிஷனர் சாஹிப்சாதா முஹம்மது அனீஸ் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை மறு
விசாரணை செய்யவுள்ள புதிய நீதிபதியின் உத்தரவுப்படி தான் அவர் விடுதலை
செய்யப்படுவார் என தெரிகிறது.
சமீபத்தில்
பாகிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க அதிகாரிகள் அப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என
கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment