[ சனிக்கிழமை,
31 ஓகஸ்ட் 2013,
02:46.02 AM GMT ]
வடக்கு மாகாண
சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு சிறந்த உதாரணத்தைக் காட்டும் என்று அரசாங்கம் அமைச்சர் நம்பிக்கை
வெளியிட்டுள்ளார். அமைச்சர் டியூ குணசேகர
இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண
சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சி வி
விக்னேஸ்வரன் திடகாத்திரமான வேட்பாளராக விளங்குகிறார்.
இந்தநிலையில்
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமானால் ஏனைய மாகாண
சபைகளுக்கு முன்மாதிரியான செயற்பாடுகளை வடக்கு மாகாண சபை மேற்கொள்ளும் என்று
குணசேகர எதிர்வு கூறியுள்ளார்.
இந்தநிலையில்
மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment