பறக்கும் கார்
பற்றி 1930களில் இருந்தே சொல்லப்பட்டு
வந்தாலும், தற்போதுதான்,
நிஜமாகவே பறக்கும் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சோதனை பறத்தல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான டெராஃபூகியா, தமது தயாரிப்பான
பறக்கும் காரை பப்ளிக்கில் முதலாவது தடவை பறக்க விட்டுள்ளது
சுமார் 20 நிமிடங்கள் பறந்துவிட்டு, வெற்றிகரமாக வீதியில் இறங்கியது இவர்களது
பறக்கும் கார். (இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மொத்தம் 40 நிமிடம் பறந்துள்ளது)
இந்த கார் பாதி
செடான் கார், பாதி பிசினெஸ்
ஜெட் விமானம் என்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியாருக்கு சொந்தமான பிசினெஸ் ஜெட்டில் பறந்து
ஒரு விமான நிலையத்தில் இறங்கியபின், நகருக்குள் செல்ல மற்றொரு காரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இனி கிடையாது.
சோதனை பறத்தலின்
போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தந்திருக்கிறோம். 2015-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது.
1-வது போட்டோவில்
பறக்கும் காரின் வெளிப்புற தோற்றத்தை பார்த்துவிட்டு, 2-வது போட்டோவில் காரின் காக்பிட்டை பாருங்கள்.
இரண்டு சீட்கள் உள்ளன. இந்தக் காரை செலுத்துவதற்கு, விமானத்தை இயக்கும் அளவுக்கு பயிற்சி
தேவையில்லை என்கிறார்கள். ஆனால், சாதாரண டிரைவிங்
லைசென்ஸூடன் பறக்க அனுமதிப்பார்களா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
3-வது போட்டோவில்
நீங்கள் பார்ப்பது, பறக்கும் காரின் ‘விங்’கில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஷாட். இந்த கார்
தயாரிப்பு டெவலப்மென்ட், சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்று, தற்போதுதான் பாதுகாப்பாக பறக்கும் அளவுக்கு
வந்துள்ளது. இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய கார் இது. பயணிகள் தமது
லக்கேஜ்களையும் எடுத்துச் செல்லலாம்.
5-வது போட்டோவில்
நீங்கள் பார்ப்பது, கார் பறக்கும்
நிலையில் இருந்து, வீதியில்
செல்லும் நிலைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட ஷாட். காரின் விங் அல்லது சிறகுகள்
தாமாகவே பக்கவாட்டில் மடிந்து கொள்வதை பாருங்கள். இதனால், வீதியில் செல்லும் மற்றைய வாகனங்களை விங்
இடிக்காது. சாதாரண கார் போல செல்ல முடியும்.
இந்தக் காரில்
உள்ள மற்றொரு விசேஷம், கார் பறப்பதற்கு
ரன்வே தேவையில்லை. அதாவது சிறிது தொலைவு ஓடிதான் மேலே எழ வேண்டும் என்ற
அவசியமில்லை. காரணம், இவற்றின்
விங்களில் உள்ளவை ரோட்டர்கள், ஹெலிகாப்டர்களில்
உபயோகிக்கப்படும் ரகத்தை சேர்ந்தவை.<iframe width="580 height="315" src="//www.youtube.com/embed/nnF2yua4KIw" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment