அமெரிக்க தூதுவர்
மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு
இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
Wednesday, 30 October 2013
வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்!
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறை!
இரண்டு
மகள்களையும் அடிக்கடி பாலியல் ரீதியான வன்புணர்ந்த தந்தைக்கு அனுராதபுரம் மேல்
நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற
நீதவான் பேமா ஸ்வர்னாதிபதி இந்தத் தண்டனை விதித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண
முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக இன்று மதியம் 1.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு
சென்றிருந்த நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.
முதலமைச்சர்
விக்னேஸ்வரன் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த பணிப்பாளர், இருதயப் பரிசோதனையின் பின்னர் 24 மணிநேரம் வைத்தியர்களின் கண்காணிப்பில்
சிகிச்சை பெற இருப்பதால் அவர், வைத்தியசாலையில்
தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.
டயானாவின் ரகசிய செக்ஸ் டைரி அம்பலம்
இங்கிலாந்து
இளவரசி டயானா தனது காதலர் பரூக் தோதியுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில்
சிக்கி பலியானார்.
இந்நிலையில்
டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன்
சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஒரு நாளைக்கு 200 பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்
ஆனால் பிரான்சை
விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர்
நஜாத் வல்லாட் பெக்காம் பேசினார்.
பிரான்ஸ்
நாட்டின் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில்
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கும்
பிரான்சுக்கும் இடையே பல விஷயங்களில் தொடர்பு உள்ளது.
பெண்கள்
நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன.
இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன.
டெல்லியில்
கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது
குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வெளியாகி இருந்தன. பிரான்சு
பத்திரிகைகளும் இந்த செய்தியை பெரிய அளவில் வெளியிட்டிருந்தன.
இந்தியாவில்
மட்டுமல்ல பிரான்சிலும் உலகின் மற்ற நாடுகளிலும், பெண்களுக்கு
எதிரான இதுபோன்ற கொடுமைகள் நடக்கத் தான் செய்கின்றன. பிரான்சில் ஒரு நாளைக்கு 200
பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.
பிரான்சில் உள்ள
பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க மறுக்கின்றனர்.
இந்தியாவிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.
இந்தியாவில்
பெண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளனவோ அதே பிரச்னைகள் பிரான்சிலும் உள்ளன.
இன்னும் கூற வேண்டுமானால் பிரான்சை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய
பாதுகாப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
.
சூரிய குடும்பத்தை போன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
ஜேர்மன் நாட்டைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் 7 கிரங்களை
கண்டுபிடித்துள்ளனர்.
இதில் d,
g மற்றும் h போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு
அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஆனால் மீண்டும்
ஆராய்ச்சி நடத்தியதில் கிரகங்கள் b, c மற்றும் f கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும்
கோள்களின் இயல்பு தன்மையுடன் விளங்குகின்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
நகர்ப்புறங்களில்
வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஓடியாடி விளையாடுவதில்லை.
வெளியே
விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர்
கேம், வீடியோ கேம் என்று அதிக
நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
Friday, 25 October 2013
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது
கொள்ளுப்பிட்டி டின்ஸ்டன் பிளேஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த
விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து
அதனை சுற்றிவளைத்த பொலிஸார் அதனை நடத்திய பெண் உட்பட 7 பெண்களை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள், பத்தரமுல்லை, ஹட்டன், காலி, மதவாச்சி, மீகொட, ஜா-எல, நாராஹேன்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என
பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி
வருகின்றனர்
நவிபிள்ளை வம்சம் இலங்கை வந்திருந்தால் அவரும் கொழுந்து கூடை சுமந்திருப்பார்! மனோ கணேசன்
இந்திய வம்சாவளி
தமிழர்களான நவநீதம்பிள்ளையின் முன்னோர் தென்னிந்தியாவில் இருந்து நல்லவேளையாக
தென்னாபிரிக்காவுக்கு போனார்கள். இங்கு கண்டி சீமைக்கு கொண்டுவரப்பட்ட மலையக
மக்களை போல் அவர்களும், தப்பி தவறி அன்று
இலங்கை வந்திருந்தால் இன்று என்ன நடந்து இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்?
U.S. காட்டுப்பகுதிக்குள் கொலையுண்ட ஆசிரியர். 14-வயது மாணவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
DANVERS, Mass. மசாசுசெட்ஸ் நகர்
உயர்தர பாடசாலைக்கு பின்னால் உள்ள மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் ஆசிரியை
ஒருவர் தாக்கப் பட்ட இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். 14-வயதுடைய பையன் பெருந்தெருவழியாக நடு இரவில்
நடந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டுபிடிக்கப் பட்டதுடன் ஆசிரியரை கொன்ற குற்றமும்
இவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பாடசாலையின்
இரண்டாவது மாடியில் உள்ள பாத்ருமில் இரத்தம் காணப்பட்டதாகவும் அதனடிப்படையில்
மேற்கொள்ளப் பட்ட விசாரனை மூலம் கொலின் றிற்சர் என்ற 24-வயதுடைய ஆசிரியையின் உடல் கண்டு பிடிக்கப்
பட்டது. டென்வர் உயர்தர பாடசாலை கணித ஆசிரியரான இவர் பாடசாலையில் இருந்து செவ்வாய்
கிழமை வீடு திரும்பவில்லை என அறிவிக்கப் பட்டதாக மாவட்ட சட்டத்தரணி ஜொனதன்
புளொடகெற் தெரிவித்துள்ளார்.
2 தாய்கள் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தை....
ஒரு தாய்,
இரண்டு குழந்தைகள்
பெறுவது இயல்பு. ஆனால், 2 தாய்மார்கள்
சேர்ந்து ஒரு குழந்தையை பெறுவது மிக மிக அபூர்வம். அமெரிக்காவில் நியூயார்க்
நகரில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சாரா மார்ஷல்
(வயது 40). என்ற பெண்ணும்,
மேகி லெய்க் (35) என்ற பெண்ணும் தோழிகள். இருவரும் சேர்ந்து
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். அதற்காக, நியூயார்க்கில் உள்ள டாக்டர் ஆலன் காப்பர்மன்
என்பவரின் ஆஸ்பத்திரியை அணுகினர்.
மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்
மஞ்சள் மற்றும்
பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.
உங்களுடைய அன்றாட
உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத்
தடுக்கலாம்.
அதிலும் மஞ்சள்
தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு
பயனுள்ளதாக இருக்கிறது.
Swiftkey மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகம்
இம்மென்பொருளின்
உதவியுடன் தட்டச்சு செய்வது இலகுவாகவும் விரைவாகவும் காணப்படும்.
தற்போது
இம்மென்பொருளின் புதிய பதிப்பான Swiftkey 4.3 Beta அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய
பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் சில
புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது புதிய
அம்சங்களாக சில மொழிகள் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன் மொபைல் சாதனத்தை இலகுவான
முறையில் அன்லொக் செய்வதற்கு ஏற்றவாறு கீ அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Friday, 18 October 2013
முழங்காவில் மக்களை தந்திரோபாயமாக வெளியேற்ற அரசாங்கம் முயற்சி: சிறீதரன் பா.உ, மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உடனடி விஜயம்
இதன் மூலம்
முழங்காவில் பிரதேசத்தில் உள்ள வேரவில்,வலைப்படு, கிராஞ்சி ஆகிய
பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்த பிரதேசங்களில் வாழமுடியாத சூழ்நிலைகள் உருவாகி
அவர்களாகவே வெளியேற வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை இப்பகுதி வாழ் மக்களுக்கு
ஏற்படும்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
ஈ.பி.ஆர்.எல்.எவ்.
கட்சியினைச் சேர்ந்த மூவர் வவுனியாவில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளும் போது அதனைத்
தவிர்த்திருந்த மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்
பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
வலி.மேற்கு சங்கானைப்
பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
இன்று வருகை தந்திருந்தார்.
இதன்போதே அவர்
முன்னிலையில் இந்திரராசா சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு
மாவீரர் துயிலும்
இல்லத்தை இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யவிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்தே
சுமார் 200 க்கும் மேற்பட்ட
பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள்!
இமேற்படி
கடனீரேரி பகுதியில் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கும் கூட்டுவலை உள்ளிட்ட
வலைகளையும், தடைசெய்யப்பட்ட
கடற்றொழில் முறைகளையும் பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடந்த பல வருடங்களாக தொழில்
செய்து வருகின்றனர்.
தமிழ் பெண்கள் மீது படையினர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு: இராணுவம் மறுப்பு
இராணுவ பேச்சாளர்
ருவன் வணிகசூரிய இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
வடக்கில்
இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறான பிரசாரங்கள்
மேற்கொள்ளப்படுவதாக வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கார் கடலுக்குள் பாய்ந்து விபத்து: யாழ்.பண்ணை பாலத்தில் சம்பவம்!
சம்பவம் பற்றி
மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து
வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் நால்வர் கார் ஒன்றில் தீவுப்பகுதியில் பல இடங்களைப்
பார்வையிட்ட பின்னர் யாழ் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.


முல்லைத்தீவில் தமிழரொருவரிடம் பணம் பறித்த இராணுவத்தினர்
நேற்று இரவு 8.00 மணியளவில் கருணாநிதி கங்காதரன் என்பவருக்கே
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது ஊரான
ஆழியவளைக்கு செல்லும் போது வழிமறித்த இராணுவத்தினர் அவரது அடையாள அட்டையைத்
தருமாறு கோரியுள்ளனர்.
தனது அடையாள
அட்டையை எடுக்கும் போது அவரிடம் இருந்த 6600 ரூபா பணத்தினை இராணுவத்தினர் பறித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்
அமெரிக்காவின்
மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.
மக்கள் நடமாட்டம்
அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை
கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில்
நேற்று 17 வயது
மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.
கனடாவில் 40 பேர் கைது
இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டதுடன், துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே
அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளநரையை போக்கும் மருதாணி
இதற்கு
மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து
அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன்
எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய்
எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி
முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன்
கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை இரவு
முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
அறிவுத்திறனை அழிக்கும் உணவுகள்! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
நாம் சாப்பிடும்
உணவில் 20-30% உணவு தான்
ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும்
நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.
சுவை நன்றாக
இருப்பதால், நாம் சில வகை
உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு
செய்கிறது.
பிரான்ஸ் அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
வடக்கு பிரான்ஸ்
பகுதியில் வருகின்ற ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக
போட்டியிட இருந்தவர் அன்னி சோபி லிகரே.
இந்நிலையில் இவர்
அந்நாட்டின் நீதி அமைச்சரான கிறிஸ்டினா டாபிராவின் புகைப்படத்தையும், அருகில் ஒரு குரங்கின் புகைப்படத்தையும் இணைத்து
தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
Tuesday, 15 October 2013
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள்
நாடு திரும்பியுள்ளனர்.
அந்த குழுவில் 8
பெண்களும் 25 ஆண்களும் இருந்துள்ளதுடன் சிறுவர்கள் எட்டுபேரும் இருந்துள்ளனர்.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
எச்.ஐ.வீ.
தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில்
35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற
பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பட்டினியில் இலங்கை 43வது இடம்: தொடர்ந்தும் ஆபத்தான நிலையில்!
இந்நிலையில், இந்தியா 2012ம் ஆண்டு உலக பட்டினிச் சுட்டியில் 67ம் இடத்திலிருந்து 2013ம்
ஆண்டு 63ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
எனினும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 40 வீதமானோர் ஆபத்தான நிலையில்
இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாலிபர் படுகொலையால் ரஷ்யாவில் பயங்கர வன்முறை: 1600 பேர் கைது
அந்த இளைஞரைக்
கொன்றது காகசஸ் இனத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வலதுசாரிகள்
ஞாயிற்றுக் கிழமை பிரியுலியோவில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்களில் 400 பேரை பொலிசார் கைது
செய்தனர். இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மேலும் வன்முறை பரவியுள்ளதாக
சந்தேகத்தின் அடிப்படையில் 1,600
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

காரை ஏற்றிய மூதாட்டி: உயிருக்காக போராடும் 79 வயது முதியவர்
சுவிஸின் சூரிச்
பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கையில் 60 வயது பெண்ணொருவர் ஒட்டிய கார் ஒன்று அவர் மீது
மோதியது.
இதில் காயமடைந்து
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது
சம்பந்தமாக பொலிசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசி, பட்டினியால் வாடும் இந்திய மக்கள்: அறிக்கையில் தகவல்
2011-2013ம் ஆண்டில்
உலகில் 842 மில்லியன் பேர்
பசியால் வாடுகிறார்கள். இந்த எண்ணிக்கை 2010-2012ம் ஆண்டுடன் (870 மில்லியன்) ஒப்பிடுகையில் சற்று குறைவு தான்.
120 நாடுகளில் உள்ள
மக்களை கணக்கில் கொண்டு அதில் எத்தனை பேர் பசியால் வாடுகிறார்கள் என்பது
கணக்கிடப்பட்டுள்ளது.


கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை தொடக்கம்
டொரண்டோவில் உள்ள
Sick Kids என்ற
மருத்துவமனையிலேயே, பாலின மாற்று
அறுவை சிகிச்சைக்கான புதிய மருத்துவமனை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
பாலின வேறுபாட்டை
உணரும் நபர்கள் தங்கள், பாலினத்தை
மாற்றிக்கொள்ளும் அறுவைசிகிச்சையை இந்த மருத்துவமனையில் செய்ய சட்டபூர்வ அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பாலின மாற்று
அறுவை சிகிச்சை டொரண்டோவில் முதன் முறையாக தொடங்கப்பட்ட மருத்துவமனையாகும்.
தொடங்கப்பட்ட
சிறிது நேரத்திற்குள்ளாகவே, நபர் ஒருவர்
வந்து தகவல்களை கேட்டறிந்து சென்றதாக மருத்துமவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அறுவை
சிகிச்சை செய்து கொள்பவர்கள் குறைவு என்றாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே
தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளன.
கூகுள் கிளாசுக்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் ION கிளாஸ்
தற்போது அதனை
விஞ்சும் வகையில் ION கிளாஸ் எனும்
புதிய சாதனம் அறிமுகமாகவிருக்கின்றது.
ஸ்மார்ட்
கைப்பேசிகள் அல்லது டேப்லட்களின் உதவியுடன் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள
இந்த ION கிளாஸ் ஆனது
ரிமோட் போன்று செயற்படுதல், அலேர்ட்களை
தோற்றுவித்தல், அறிவிப்புக்களை
தெரிவித்தல் (Notifications) போன்ற பல
தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.
இதில் Bluetooth
4.0 சிப், மின்கலம், பல்வர்ண எல்.ஈ.டி இரு பொத்தான்கள் போன்றன
உள்ளடக்கப்பட்டுள்ளன.


சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் “அதிர்ச்சிக் காட்சிகள்”
சவூதி
அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி
இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண்
விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த
நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி
பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.Monday, 14 October 2013
பொலிசாரிடமிருந்து தப்பிய பெண்ணிற்கு ரயில் கொடுத்த அதிர்ச்சி.....
காரில் வேகமாக
பயணித்த பெண்மணியை பொலிசார் துரத்திச் சென்றுள்ளனர். இதேவேளை ரயில் கடவையை கடக்க
முயன்ற அக்காரை எதிர்பாராத விதமாக வந்த ரயில் மோதியுள்ளது.
தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப்
போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
சாகும் வரையான
உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா
நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை
ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று
மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனியும்
பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட
வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
பத்து தினங்களாக எரியும் தீ: அணைக்கும் முயற்சியில் படையினர்
மட்டக்களப்பு
மாநகர சபை பிரிவிலுள்ள திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாநகர
சபையின் குப்பை கொட்டும் பகுதி கடந்த பத்து தினங்களாக தீப் பிடித்து எரிந்து வரும்
நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் மற்றும் பொலிசார், விமானப்படையினர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியோரின்
உதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் அத்தீயை அணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)