Wednesday, 9 October 2013

ஜேர்மனி செய்தி பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்! 25 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பொலிசார்



ஜேர்மனில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குழந்தைகள், தங்களது தயாரால் தான் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற உண்மையை பொலிசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மன் நாட்டை சேர்ந்த 44 வயது பெண்ணொருவருக்கு 1996 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவது குழந்தையையும் பெற்றெடுத்த இப்பெண்ணின் முதல் இரண்டு குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டு இப்பெண்ணின் முதல் கணவர் இவர்களது வீட்டிற்கு பின்னால் இரண்டு குழந்தைகளின் உடல்கள் சிதைந்து கிடப்பதை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக பொலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் இந்த வழக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வீட்டின் பக்கத்தில் ஒரு கல்லறையானது பெயர்கள் எதுவும் எழுதப்படாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் குழந்தைகளை தாயார் தான் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்று அறியப்படவில்லை. மேலும் அக்குழந்தைகளின் தாயார் இதனை மறுத்துவருகிறார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா