Monday, 14 October 2013

ஜேர்மனியில் ஓய்வு பெறுவதற்கே பயப்படும் மக்கள்


ஜேர்மனியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுவதற்கே பயப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு பணியாளர்களின் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது.

இதில் 42 சதவிகிதம் பேர் தாங்கள் ஓய்வு பெறுவதற்கே பயப்படுவதாகவும், இதற்கு ஓய்வூதியம் மிக குறைவாக கிடைப்பதே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

18 சதவிகிதம் பேர் ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 69 சதவிகிதம் பேர் பணியிடங்களில் மிக அரிதாகவே பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம் குறித்த அமைப்பு, நிரந்தரமான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா