Thursday, 10 October 2013

எழுந்து நிற்கமுடியும்! துஷாவின் கால்கள் செயற்படத் தொடங்கின!


பிரித்தானியாவின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தமிழ் சிறுமியான துஷா கமலேஷ்வரன், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல குணமடந்து வருவதுடன்  செயலிழந்த அவரது இரு கால்களும் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெற்கு லண்டனில் உள்ள கடையொன்றில் இடம்பெற்ற  கோஷ்டி மோதலில் இடையில் சிக்குண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  துஷா கமலேஸ்வரன் காயமடைந்தார்.
<iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/PcEIuo8izMk" frameborder="0" allowfullscreen></iframe>


சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வீதியில் வைத்தே மருத்துவர்கள் அவருக்கு முதலில் சிகிச்சையளித்தனர்.  பின்னர் அன்றிரவு அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, இரு தடவை அவரது இதயம் நின்று துடித்தது. எனினும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் அவரது உயிர் காப்பற்றப்பட்டது.

12 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய போதிலும் அவர் எழுந்து நடப்பதற்குரிய சந்தர்ப்பம் மிக குறைவாகவே  இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் துஷாவின் உறுதியான நம்பிக்கையினால் தற்போது அவரின் கால்களுக்கு உணர்ச்சி வந்துள்ளதாகவும் அவரால்  கூடிய விரைவில் சுயமாக எழுந்து நடக்க  முடியும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனினும் முன்னர் கால்கள் செயலிழந்து போனதாக தெரிவித்திருந்த மருத்துவர்கள், தற்போது துஷாவின் கால்களுக்கு உணர்ச்சி இருப்பதையும், துஷா எழுந்து நடக்க முயற்சிப்பதையும்  பார்த்து ஆச்சரியமடைந்துள்ளதாக  லண்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

புன்னைகையுடன் விளங்கும் சிறுமி துஷாவுக்கு இருக்கும் தைரியமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுடன் அவருக்கு மேலும் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா