Wednesday, 9 October 2013

காதல் தோல்வியால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்


கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.45 அளவில் நிகழ்ந்துள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கத்தை சேர்ந்த 20 வயதான விஜி சிரான் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து இவர் தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா