வடக்கு பிரான்ஸ்
பகுதியில் வருகின்ற ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக
போட்டியிட இருந்தவர் அன்னி சோபி லிகரே.
இந்நிலையில் இவர்
அந்நாட்டின் நீதி அமைச்சரான கிறிஸ்டினா டாபிராவின் புகைப்படத்தையும், அருகில் ஒரு குரங்கின் புகைப்படத்தையும் இணைத்து
தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தியானது
அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் கட்சி
வேட்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படவுள்ளார் என்றும் இருப்பினும்
கட்சியில் அவரது பங்கு மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை விசாரித்த பின்னரே அவர்
நீக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கட்சி உறுப்பினர் ஒருவர்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவர் இவ்வாறு
வெளியிட்டதற்கு இனவேறுபாடு பிரச்சனை தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment