Thursday, 10 October 2013

மக்களுக்காக கிளிநொச்சி புகையிரதப் பாதை புனரமைக்கப்படுமா?


கிளிநொச்சி நகரின் கணேசபுரம் பிரதான வீதியைக் குறுக்கறுக்கும் புகையிரதப்பாதை செப்பனிடப்படாமையினால் பாதசாரிகள் உட்பட ஊர்திகள், உந்துருளிகள், ஈருருளிகள் என்பன பயணிப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வந்துள்ளனர்.
கடந்த 09ம் திகதி காலை மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்ததால் அவ்வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் எனப்பலரும் பெரும் நெருக்கடியியைச் சந்திக்கின்றனர்.


இதனைக் கருத்தில் கொண்டு இச் சிரமத்தை சீராக்கும் முகமாக சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நோக்குநர்களை குறித்த பாதையினை முழுமைப்படுத்தி போக்குவரத்தினைச் சீர்செய்து தருமாறு மக்கள் .கேட்டுள்ளனர்

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா