Monday, 14 October 2013

யாழில் ஒழுக்கத்தைப் பேணுமாறு படையினரிடம் இராணுவத் தளபதி கோரிக்கை


யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் எல்லா நேரங்களிலும் தமது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு இன்று முதன் முதலாக விஜயம் மேற்கொண்டார்.
அங்கு படையினர் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தீவின் எந்தப் பகுதியிலும் இனி பயங்கரவாத வன்முறை இல்லை என்றாலும் படையினர் பெற்றுக் கொண்ட பயிற்சிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

முழு நாடும் ஜனநாயகத்தை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாண மக்களுடனும் நட்பு ரீதியாக பழக வேண்டும். அந்த வகையில் பாதுகாப்பு படையினர் சமூகம் சார்ந்த சேவையினை வழங்க வேண்டும். அதற்கு கடுமையான ஒழுக்கங்களைப் பேண வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா