இலங்கையில்
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட மாகாண சபைக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று தேர்தல்
நடைபெற்றது.
இந்த தேர்தலில்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை ஜனாதிபதி
ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் இடையே பலத்த
போட்டி நிலவியது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ராணுவத்தினரும், அரசு எந்திரமும் செயல்படுவதாக, தமிழ் தேசிய கூட்டணி சார்பில் புகார்
கூறப்பட்டு வந்தது.

இந்த தேர்தல்
முடிவில், 5 மாவட்டங்களிலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 14 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், மன்னாரில் 3இடங்களையும் பெற்றுள்ளது.
இதன்படி, வடக்கு மாகாணத்தில் உள்ள 36 இடங்களில், தமிழ் தேசிய கூட்டணி 28 இடங்களிலும், ஆளும் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர
கட்சி 7 இடங்களிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக முடிவுகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு
அறிவித்த பிறகு தமிழ் தேசிய தலைவர் சம்பந்தன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி
அளித்தார்.
அப்போது அவர்
கூறும்போது,
''நேற்று நடந்த
தேர்தலில் தெளிவாகவும், துணிச்சலாகவும்
முடிவு அளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவு,
ஒன்றுபட்ட இலங்கைக்குள்
மக்கள் இருக்க விரும்புபவதை காட்டுகிறது. தமிழர்களின் கோரிக்கையை ஏற்று வடக்கு,
கிழக்கு மாகாணங்களில்
அரசியல் தீர்வு காண வேண்டும்.
மேலும்,
13வது அரசியல்
சட்டதிருத்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதியுடன் இருக்கிறோம். முதல்வராக
விக்னேஷ்வரன் பொறுப்பேற்ற சில நாட்களில் மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
நாங்கள் இங்கு வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவின் ஆதரவை தொடர்ந்து கேட்போம்''
என்றார்.
முதல்வராக
பொறுப்பேற்க இருக்கும் விக்னேஷ்வரன் பேசும்போது, ''இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாக்குப்பதிவு
பிரச்சனையுடன் தான் நடந்தது. முடிந்தால் தேர்தலை நிறுத்திவிடலாம் என இலங்கை அரசு
நினைத்தது. இந்தியாவின் நெருக்கடி காரணமாக வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது''
என்றார்.
No comments:
Post a Comment