Sunday, 22 September 2013

ஜேர்மனில் பரபரப்பான கட்டத்தில் தேர்தல்


ஜேர்மனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் ஒய்வு பெற்று நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜேர்மனில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அதிகமாக பொருளாதார காரணிகளே இடம் பெற்றுள்ளது.

ஜேர்மனியில் இருந்த வேலையில்லாத் திண்டாட்டமானது 5 மில்லியன் மக்களை வேலையற்றவராக்கியிருந்தது, தனது ஆட்சியில் இது மூன்று மில்லியன்களாக குறைந்துள்ளதாக பிரச்சாரம் செய்கிறார் ஏஞ்சலா மெர்க்கல்.

ஆனால் இவருடைய ஆட்சியில் சம்பளம் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கே சலுகைகாட்டப்பட்டுள்ளது.

ஏழைகளின் பக்கம் இவருடைய ஆட்சி இல்லை என்றும் உண்மையில் இவர் பிரச்சனையை தீர்க்கவில்லை சம்பளத்தை குறைத்துத்தான் வேலையின்மையைக் குறைத்துள்ளார் என எதிரணியினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.


மேலும் இருதரப்பு விவாதத்தில் மெர்க்கல் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா