வேலுப்பிள்ளை
பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் என அமைச்சர்
சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின்
தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாஷிசவாத
அடிப்படைவாத குழுவிற்கு தேர்தலில் வெற்றி கிடைத்திருக்குமானால் அவர்கள் 77 ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்தை மீண்டும்
ஆரம்பிக்க நினைத்தால் அதனை தோற்கடிக்க எமது கட்சி நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மீதுள்ள அச்சம் காரணமாக எமது கட்சி இந்த நடவடிக்கையை எடுக்க
நினைக்கவில்லை. எதிர்கால சந்ததியை நினைத்து தமிழ் சமூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
அஞ்ச வேண்டும்.
பயங்கரவாத
அரசியல் முன்னணி ஒன்றுக்கு உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் ரீதியான
முன்னோக்கி செல்ல இடமளிக்கப்படவில்லை. யுத்தப் போராட்டத்தை விட ராஜதந்திர ரீதியில்
முன்னெடுக்கப்படும் போராட்டம் மிகவும் பயங்கரமானது என சம்பிக்க ரணவக்க மேலும்
தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment