Thursday, 26 September 2013

மண்ணில் புதையுண்டவர்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம்


மண்ணில் புதையுண்டு போகும் மக்களை ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியலாம் என நாசா மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் தூரத்தில் உள்ள பொருட்களை சிறிய ரேடார் சாதனத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இதே நுட்பத்தை பயன்படுத்தி எதிர்பாராத விதமாக மண்ணில் புதையுண்டு போகும் நபர்களை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருவியின் புதிய மாதிரியானது அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் விண்வெளி மைய நிறுவனத்தின் நிபுணர்களிடம் பரிசோதித்துக் காட்டப்பட்டது.

பேரழிவு மற்றும் அவசரகாலங்களில் தனி நபர்களைத் தேடுதல் என்பதன் குறுகிய வடிவமாக பைண்டர் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் இடிபாடுகளுக்கு அடியில் 9 மீ தொலைவு வரை புதையுண்ட மக்களைக் கண்டறியும் திறன் கொண்டிருந்தது.

திறந்தவெளிகளில் 30 மீ தொலைவுவரை இந்த சாதனம் மக்களை அடையாளம் காட்டியது. திடமான கான்கிரீட் பொருட்களுக்குப் பின்னால் 6 மீ வரை இதன் செயல்படும் திறன் வெளிப்பட்டது.

எனினும் இந்த ரேடார்கள் இடிபாடுகளின் பல பரப்புகளிலும், கோணங்களிலும் செல்வதால் துல்லியமாகக் கண்டறிதல் என்பது கடினமாக இருந்தது.

எனவே இந்த சாதனத்தை மேம்படுத்தி, நகரும் மரங்கள், விலங்குகள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் சமிக்ஞைகளை வடிகட்டி ஒரு நபரின் மார்பிலிருந்து வெளிப்படும் சிறிய அதிர்வுகளை கண்டறியும் வண்ணம் விஞ்ஞானிகள் செயல்படுத்தி காட்டினர்.


இதன் மூலம் ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எளிதாக மீட்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா