Saturday, 28 September 2013

மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை!- கல்கிஸையில் சம்பவம்


8 வயதான மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை ஒருவர் தொடர்பான சம்பவம் கொழும்பு கல்கிஸ்சை பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் கல்கிஸ்சை வட்டரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று நடந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் தனது மகளுக்கு விஷத்தை கொடுத்து அவர் உயிரிழந்த பின்னர் தானும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார்.


சம்பவத்தில் 43 வயதான நபரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா