Tuesday, 24 September 2013

ஜப்பானின் மூன்று கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது


ஜப்பானின் கரையோர சுய பாதுகாப்பு படையினரின் மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளன.
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்த கப்பல்கள் கொழும்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்களை வரவேற்கும் முகமாக நிகழ்வொன்றை இலங்கை கடற்படையினர் இன்று நடத்தினர்.

குசிமா டிவி-3508, சிராயுகி டிவி-3517, இஸோயுகி டிடி -127 ஆகிய கப்பல்களே இலங்கை வந்துள்ளன.

இதில் கசிமா என்ற பயிற்சிக்கப்பல்143 மீற்றர் நீளத்தை கொண்டது. சிராயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது. இஸோயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது.

இவை மூன்று 200க்கும் - 300க்கும் இடைப்பட்ட கடற்படை வீரர்களை காவிச் செல்லும் வல்லமை கொண்டது.


எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த கப்பல்கள் இலங்கையில் தரித்திருக்கும் என்று அறிவிக்கப்படடுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா