Tuesday, 24 September 2013

முகமாலையில் கண்ணி வெடியில் சிதறியது உழவு இயந்திரம்: ஒருவர் பலி! இருவர் படுகாயம்..


முகமாலை முன்னரங்கக் காவலரண்கள் இருந்த பகுதியூடாக கம்பிக்கட்டைகள் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், கண்ணிவெடியில் சிக்கியதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறத்தி நகர், அல்லிப்பளையினைச் சேர்ந்த அற்புதராசா சுதாகரன் (வயது 30) என்பவர்  உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த குகானந்தன் சுதாகரன் ( வயது 17) , துரைசிங்கம் நிரோஜன் ( வயது 17) ஆகியோர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வெடிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி மற்றும் துயரத்தில் ஆழ்த்திய அதே வேளையில், இச் சம்பவம் நடைபெற்றதிலிருந்து மாலை 5 மணிவரை அவ்விடத்திற்கு பொலிஸ் தரப்பினர் யாரும் செல்லவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா