Sunday, 22 September 2013

கூட்டமைப்பின் அமோக வெற்றியை கொண்டாடுகின்றது வடமாகாணம்! கோயில்களிலும் தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள்


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் அமோகமாக கொண்டாடி வருகின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெடிகளைக் கொழுத்தி மக்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.


குறிப்பாக வெற்றி பெற்றவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுகின்றன. கோயில்களிலும் தேவாலயங்களிலும் மக்கள் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றிக் களிப்பில் மக்கள் அங்காங்கே இனிப்புக்களையும் அன்பளிப்புக்களையும் கொடுத்து வருகின்றனர்.


இதேவேளை கூட்டமைப்பின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத இராணுவம் அங்காங்கே மக்களை அச்சுறுத்தும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா