கொழும்பிலிருந்து
வெளிவரும் தமிழ் செய்தித்தாள் ஒன்றுக்கு
வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்டாயமாக அவர்
சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
அத்துடன் சிங்கள மக்களை குழப்புவதற்கு இனத்துவேஷத்துடன்
செயற்படுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் அவர் ஏதாவது
பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமோ என்று தெரியாது. நாங்கள் இவற்றை
அனுபவத்தில் நன்றாக படித்துள்ளோம்.
உதாரணமாக
எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது
எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல
எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார்.
டட்லி
சேனநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது.
இப்படி ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment