மலேசியா குடிவரவு
குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 49 பேர் இலங்கை
பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின்
ஜலான் சுல்தானா பகுதியில் ட்ரக் வண்டி ஒன்றில் மறைந்திருந்த போது இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத
குடியேற்றவாசிகள் மலேசியாவுக்கு வருவதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்
ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையிலே இந்த வெளிநாட்டவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொண்ட சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள்
மலேசியாவில் தங்கியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
ஒரு கோடி ரூபா
பெறுமதியான முத்துக்களுடன் 5 பேர் கைது
ஒரு கோடி
ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 91 முத்துக்களை 31 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த 5 சந்தேக நபர்களை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
இவர்கள்
பெல்லன்வில விகாரைக்கு அருகில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தை
சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.
தொல் பொருள்
அகழ்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட இந்த முத்துக்கள் இயற்கையான முத்துக்கள் எனவும்
அவை ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை எனவும் விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள்
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment