Sunday, 29 September 2013

அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிடம் 75 ஆயிரம் கோடி ரூபா கடன்- சந்திரிக்காவுடன் இணைந்து ரணில் சதித்திட்டம்


அரசாங்கம் வெளிநாடுகளில் இதுவரை 75,000 கோடி ரூபா கடனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேசிய சேமிப்பு வங்கியில் 9 சதவீத வட்டிக்கு அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுகாக 500 கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கப்படும்.

அதேவேளை மாகாண சபைத் தேர்தலை கிரிக்கெட் போட்டியாக அரசாங்கம் மாற்றியுள்ளது. அபிவிருத்தியை கண்காட்சியாக்கி தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தற்போது கடனுக்கு மகுடமாக மாறியுள்ளது.

தேர்தல் ஆணையாளர் தேர்தல் நியாயமாக நடைபெற்றதாக கூறினாலும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டன. இதனால் அந்த தேர்தலை நியாயமான தேர்தலாக கருத முடியாது என்றார்.

சந்திரிக்காவுடன் இணைந்து ரணில் சதித்திட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமொன்றை ரணில் விக்ரமசிங்க செயற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.

அப்பன் பெயர் தெரியாத சிலரிடம் துஷ்டத்தனமான திட்டங்கள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சியை பலமிழக்க செய்வதே அவர்களின் திட்டம்.


சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை பெறும் திட்டமும் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாவிச் செல்லவே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா