சென்னை மேல்
நீதிமன்றத்தில் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையை சேர்ந்த
சட்டத்தரணி கே.ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின்
கடற்படையினர் 500 மேற்பட்ட இந்திய
மீனவர்களை கொன்றுள்ளனர்.
அதேநேரம்
இலங்கையின் படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் ஆயிரக்கணக்கான
தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில்
தமிழ்நாட்டின் தமிழர்கள் மத்தியில் இலங்கைக்கு எதிரான கொள்கை பின்பற்றப்படுகிறது.
எனவே இலங்கைக்கு
போர்க்கப்பல்களை வழங்குவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்று மனுதாரர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுவில்
பிரதிவாதிகளாக தமிழக பிரதம செயலாளர் மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியோர்
குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில்
மனுவின் விசாரணை இந்த வாரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment