ஜேர்மனியின்
போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(வயது 27).
அளவுக்கு அதிகமாக
குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி பொலிசில் சிக்கி கொள்வதே இவரது
வாடிக்கையாக இருந்தது.
பலமுறை
பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு உள்ளார், இந்நிலையில் நேற்றும் வழக்கம்போன்று குடித்துள்ளார்.
சரியான பாதையில்
செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, போதையில் டிராம் வண்டி தடம் மாறி ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டினார்.
அந்த தண்டவாளம்
அப்படியே சுரங்க பாதைக்குள் சென்றது. இவரும் போதையில் சுரங்கத்துக்கு சென்று
கொண்டிருந்தார்.
உடனடியாக அபாய
மணி ஒலிக்கவே, சுரங்க
தண்டவாளத்துக்குள் கார் நுழைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உடனடியாக
பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரை பறிமுதல் செய்து மார்ட்டினையும் கைது
செய்தனர்.
மேலும் அவருடைய
டிரைவிங் லைசென்சையும் ரத்து செய்துள்ளனர்.
No comments:
Post a Comment