Sunday, 22 September 2013

விவசாய மானியத்தில் முதலிடம் பிடித்த சுவிஸ்

              

சுவிஸ் நாடானது உலகிலேயே விவசாய மானியத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.
47 நாடுகளில் நடத்தப்பட்ட புள்ளி விபரத்தில் இந்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பாட்டு அமைப்பானது 47 நாடுகளின் விவசாய மானியம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் கடந்த ஆண்டு 57 சதவிகிதம் இருந்த விவசாய வருவாயனது இந்த வருடம் 55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பொருளாதார மேம்பாட்டு இயக்குனர் கென் அஸ் கூறுகையில், உலகம் முழுவதும் மானிய குறைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் பல நாடுகள் பங்கேற்றதில் சுவிஸ் நாட்டின் விவசாய வருவாயனது நம்பிக்கையூட்டும் வகையிலும், வளர்ச்சியில் மேலோங்கியும் காணப்பட்டது.

மேலும் சுவிஸ் நாடானது சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடமாகும் எனவே உலகளவில் மானிய விவசாயத்தில் இந்நாடு முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் 7 சதவிகித மானியமும், அவுஸ்திரேலியா மற்றும் சிலி நாட்டில் 3 சதவிகிதமும் மற்றும் நியுசிலாந்தில் 1 சதவிகிதம் மானியம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா